கட்டுரை: புத்தகம் படிக்கும் முறை-2

கதை புதினங்கள் படிக்கும் போது...

1. ஆங்கில புத்தகம் - பல வேளையில் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிவதில்லை. அதனால், கதையை நடுவில் நிறுத்தி அகராதியில் பொருள் தேடமாட்டேன். இதனால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அதனால் Pencil அல்லது Highlighter மூலம் குறித்துக் கொள்வேன். பிறகு கதையை முடித்த பிறகே அதன் பொருள் தேடுவேன்.

2. ஆங்கிலம்-தமிழ் புத்தகங்கள் - பல வருடங்களுக்கு முன் விரைவாக படிப்பது எப்படி எனும் ஒரு புத்தகம் படித்தேன். அதை பயிற்சி செய்தேன். முழு வெற்றி அடைந்தேனா என்று தெரியாது. ஏனென்றால் விரைவாக படிப்பது எப்படி, விரைவாக புரிந்துக் கொண்டு படிப்பது எப்படி என்பது இரு வேறு முறைகள். 

மனிதனின் பார்வை மிகவும் அகலமானது. அதனால் நாம் புதினத்தின் நடுவில் நம் கண்களை பதித்துக் கொண்டு, இடது வலதாக கண்ணையோ தலையையோ அசைக்காமல், நடுவிலிருந்து படிக்க முயலவேண்டும். இதனால் நாம் வார்த்தைகளாக படிப்பதை விட்டு வரிகளாக படிக்க முயலுவோம்.

இரண்டாவது நுட்பம் ஆரம்பத்தில் விரலை வைத்துக் கொண்டு பயிற்சி செய்வது. இதில் என்ன நுட்பம். இது பழைய முறை தானே என்று நீங்கள் கேட்கலாம். இதில் என்ன வித்தியாசம் என்றால், நாம் விரல்களை இடது வலதாக நகர்த்தி தானே பழக்கம்.

அதற்கு பதிலாக விரலை முதல் வரியின் நடுவில் பதித்து மேலிருந்து கீழாக நகர்த்தவேண்டும்.

முற்றிலும் நீங்கள் படிக்காத ஒரு புத்தகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். செல்பேசியை எடுத்து Stop Watch துவக்குங்கள். ஒரு பக்கம் படியுங்கள். கடிகாரத்தை நிறுத்துங்கள். பிறகு அந்த பக்கத்தில் உள்ள வார்த்தைகளை எண்ணுங்கள். இதை ஒரு நிமிட வேகத்திற்கு எத்தனை வார்தைகள், எத்தனை பக்கங்கள் என்று நினைவில் கொள்ளுங்கள். 

பிறகு மேற் சொன்ன பயிற்சிகளை செய்த பிறகு மறுபடியும் உங்கள் வேகத்தை கணக்கிடுங்கள்.

புத்தகம் வாங்கும் குறிப்பு - ஞானியின் அடுத்த கட்டுரையில் எதிர்பார்க்கலாம்.

1. புத்தகங்கள் கடன் கொடுக்காதீர்கள்.

2. புத்தகங்கள் கடன் வாங்காதீர்கள்.

3. 4-5 புத்தகங்களாக வாங்கும் பழக்கம் வேண்டாம். நீங்கள் வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து விடுமுறையில் புத்தகங்களை வாங்கி சென்றால் மட்டும் இந்த பழக்கம் கொள்ளுங்கள். 

இல்லையென்றால் ஒரு புத்தகம் படித்த பிறகே இன்னொரு புத்தகம் வாங்குங்கள். உங்களுடைய படிக்கும் ஆர்வம் உங்களை விரைவில் இந்த புத்தகத்தை முடித்து அடுத்து வாங்க தூண்டும்.

4. இந்த முறை என்னால் செயலாக்கப்படுத்த முடியாத, ஆனால் மிகவும் விரும்பும் முறை - புத்தகம் வாங்கியவுடன் Polythene Sheet கொண்டு அட்டையிடுங்கள். இதனால் புத்தகங்கள் கெடாமல் இருக்கும். 

5. தொழில் நுட்ப புத்தகங்கள் தவிர மற்ற எல்லா புத்தகங்களிலும் பென்சில் மட்டும் உபயோகியுங்கள். ஹைலைட்டர் Paper-back Editionகளுக்கு உதவாது.

6. புத்தக அலமாரியை பூட்டி வையுங்கள். புத்தகம் கடனுக்கு இல்லை என்று ஒட்டி வையுங்கள். இது கடன் கேட்போரை கட்டுப்படுத்தும்.

7. பழைய புத்தகங்களை அட்டையில் போடும் போதும் மெடிமிக்ஸ் காலி டப்பாக்கள், நாப்தலின் உருண்டைகள் போட்டு வையுங்கள். 

8. அட்டை பெட்டிகளை பரண் மேல் வைக்காதீர்கள். ஏனென்றால் ஈரப்பதம் புத்தகங்களை கெடுத்துவிடும்.

மற்றவர்களும் தாங்கள் அறிந்த முறைகளை பகிர்ந்துக் கொள்ளலாமே.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி