Posts

Showing posts from August 24, 2014

மலரும் நினைவுகள் : 25 வருடங்களுக்கு முன் One-Touch

முதன் முதலாக எங்கள் வீட்டிற்கு ஒரு 2-in-1 வந்திருந்தது. National Panasonic. பழைய படங்களில்  இன்னும் காணலாம்.அனைவரும் தூர நின்று பார்க்கலாம். யாரும் வீட்டில் இல்லாத போது தொட்டுக் கொள்ளலாம்.  சத்தம் போடாமல் Play Stop Rewind Forward பொத்தான்களை அமுக்கி கொள்ளலாம். Record பட்டனை   தொட மட்டும் யாருக்கும் உரிமை இல்லை. வானோலி கேட்டுக் கொள்ளலாம்.  இப்படியான ஒரு வஸ்து எங்கள் வாழ்கையை மாற்றிவிட்டது. பள்ளிவிட்டு வந்ததும் அதனுடன் ஒரு romance.   ஒரு முறை அக்காவை பாட சொல்லிவிட்டு பதிவு செய்தார் எங்கள் சித்தப்பா. யாரும் சத்தம்போடக்கூடாது, யாரும்   இங்கே அங்கே போகக்கூடாது கதவை மூட திறக்க கூடாது போன்ற பல கட்டுபாடுகள். அனைவரும் அமைதியாக  உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்க பாடல் பதிவானது. வானோலியில் அக்காவின் பாடல் கேட்டது போல ஒரு  பெரிய மகிழ்ச்சி. அது தான் சத்தம் போடக்கூடாதே என்று பல நாட்கள் வானோலியில் வரும் பாடல்கள் பதிவாகும் போதும் வீட்டில்  மூச்சு. இவ்வாறு இருக்க சித்தப்பாவே தன் கட்டுபாடுகளை மீறி வானோலியில் வரும் பாடல்கள் பதிவு செய்யும் போது  பேசினால் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று சொல்ல எங்களுக்கெல்ல